புதுச்சேரியில் 18-ந்தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிப்பு
|புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை விடப்படுவதாக முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (நவ.12) கொண்டாடப்படுகிறது. மறுநாள் (நவ.13) திங்கட்கிழமை வழக்கம்போல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் சூழல் இருந்தது. தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அவசர அவசரமாக திரும்பவேண்டிய நிலை இருந்தது.
எனவே, வெளியூர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்று வரும் 13-ந்தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் 13-ந்தேதி விடுமுறை விடப்படுவதாக முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்தார்.
இதனிடையே இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக 18-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழக உத்தரவிட்டது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் வரும் 18-ந்தேதி அரசு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.