< Back
புதுச்சேரி
மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை முகாம்
புதுச்சேரி

மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை முகாம்

தினத்தந்தி
|
6 Aug 2023 10:29 PM IST

கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை முகாம் நடந்தது.

பாகூர்

பாகூர் அருகே உள்ள கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை பள்ளியின் பொறுப்பு ஆசிரியர் துரைசாமி தொடங்கி வைத்தார். இதில் சுகாதார மைய டாக்டர் மலர்மன்னன், செவிலியர் விஜயபாரதி, ஆஷா ஊழியர் தேவி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு ரத்தசோகை பரிசோதனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஜெயபாரதி செய்திருந்தார். முடிவில் அறிவியல் ஆசிரியை வரலட்சுமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்