< Back
புதுச்சேரி
வில்லியனூர் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்
புதுச்சேரி

வில்லியனூர் இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்

தினத்தந்தி
|
11 Oct 2023 11:44 PM IST

வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

புதுச்சேரி

வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய இன்ஸ்பெக்டரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

பிறந்த நாள் கொண்டாட்டம்

புதுவை வில்லியனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வேலைய்யன். இவர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி போலீஸ் நிலைய பகுதியிலேயே பட்டாசு வெடித்து அரசியல்வாதி போல பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இது வில்லியனூர் பகுதியில் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் தொடர்ச்சியாக கொலை, கஞ்சா விற்பனை என குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இன்ஸ்பெக்டர் வேலைய்யன் தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

விசாரணை நடத்தப்படும்

போலீஸ் நிலையத்தில் நடந்த கொண்டாட்டம் தொடர்பாக மேற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சிதர ரெட்டியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

காவல் நிலையத்தில் பிறந்த நாள் கொண்டாடியது தொடர்பாக எனது கவனத்திற்கும் வந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் வேலையனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த கொண்டாட்டத்தில் குற்ற செயல்களில் தொடர்புடையவர்கள் யாரேனும் கலந்து கொண்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்