< Back
புதுச்சேரி
புதுச்சேரி
முத்துப்பல்லக்கில் அம்மன் வீதி உலா
|23 July 2023 9:58 PM IST
திரு-பட்டினம் ராஜசோளீசுவரர் கோவிலில் முத்துப்பல்லக்கில் அம்மனுக்கு வீதி உலா நடைப்பெற்றது.
திரு-பட்டினம்
காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத ராஜசோளீசுவரர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று மாலை அம்மனுக்கு 800 ஜோடி வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.