< Back
புதுச்சேரி
சம்பள உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்
புதுச்சேரி

சம்பள உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
24 Aug 2023 10:52 PM IST

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி

புதுவை, காரைக்கால், ஏனாம் அரசு சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தவைர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதில் பொதுச்செயலாளர் முருகன், பொருளாளர் லூர்து மரியநாதன், துணை பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் முனுசாமி, ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பணிநிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத புதுவை சுகாதாரத்துறையை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 4-ந் தேதி சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, 11-ந் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்