< Back
புதுச்சேரி
உயர் கல்வித்துறை இயக்குனர் அமான் சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பு
புதுச்சேரி

உயர் கல்வித்துறை இயக்குனர் அமான் சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பு

தினத்தந்தி
|
20 Jun 2023 9:25 PM IST

புதுவையில் உயர் கல்வித்துறை இயக்குனர் அமான் சர்மாவுக்கு கூடுதல் பொறுப்பாக திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை வழங்கப்பட்டது.

புதுச்சேரி

புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரிஷிதா குப்தா பணியாற்றி வந்தார். அவர் டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதுவை அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த இயக்குனர் பொறுப்பு உயர்கல்வித்துறை இயக்குனரான அமான் சர்மாவுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுகுமார் புதுவை அரசுப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.ஆர்.பி.என். கமாண்டன்ட் மணிஷ் காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்