< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுச்சேரியில் அக்டோபர் 2-ந்தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடக்கம்
|24 Sept 2023 2:26 AM IST
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரி விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 2-ந்தேதி முதல் புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.