சட்டசபை நோக்கி விவசாய தொழிலாளர்கள் ஊர்வலம்
|100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக வழங்கக்கோரி புதுச்சேரி விவசாய தொழிலாளர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
புதுச்சேரி
100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக வழங்கக்கோரி புதுச்சேரி விவசாய தொழிலாளர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
விவசாய தொழிலாளர்கள்
புதுச்சேரியில் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைக்கான கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று காலை அண்ணாசிலை அருகில் கூடினர். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்திற்கு மாநில செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். சங்க அகில இந்திய துணை தலைவர் லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் வின்சென்ட், மாநில நிர்வாகிகள் அரிதாஸ், விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம்
இந்த ஊர்வலம் நேருவீதி, மிஷன்வீதி வழியாக மாதா கோவில் வீதியை அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.