< Back
புதுச்சேரி
வேளாண்துறை பட்டதாரி அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
புதுச்சேரி

வேளாண்துறை பட்டதாரி அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

தினத்தந்தி
|
7 Sep 2023 5:00 PM GMT

பதவி உயர்வு வழங்கக்கோரி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

பதவி உயர்வு வழங்கக்கோரி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நேற்று விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

புதுவையில் 26 முதல் 32 ஆண்டுகள் வரை பணிபுரிந்த தகுதி வாய்ந்த வேளாண் அலுவலர்களுக்கு உடனடியாக வேளாண்துறை துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேளாண் பட்டதாரி அலுவலர்கள் கடந்த 4-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று அவர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்க தலைவர் சங்கரதாஸ் தலைமை தாங்கினர். இதில் செயலாளர் வினோத் கண்ணன், பொருளாளர் கலைச்செல்வன், இணை செயலாளர் தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்-அமைச்சருடன் சந்திப்பு

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், செயலாளர் குமார் ஆகியோரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) வம்பாகீரப் பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்த போராட்டம் காரணமாக வயல் ஆய்வு, பயிர்காப்பீடு, பயிர் உற்பத்தி மானியம் வழங்கும் திட்டம், கோப்புகள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்