11 நாட்களுக்குப் பின் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
|11 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பின் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
காரைக்கால்
11 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பின் காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வேலைநிறுத்த போராட்டம்
காரைக்கால் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவேண்டும், துறைமுகத்தை ஒட்டிய முகத்துவாரத்தை தூர்வாரவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுபற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கடலுக்கு சென்றனர்
அதனை ஏற்று, வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு, மீன்பிடி தொழிலுக்கு செல்வதாக 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் அறிவித்தனர். இதையடுத்து விசைப்படகுகளுடன் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயாராகினர். நடுக்கடலில் தங்கியிருந்து மீன் பிடிப்பதற்கு வசதியாக உணவு பொருட்கள் மற்றும் மீன்களை பதப்படுத்துவதற்கான ஐஸ் கட்டிகளை படகில் ஏற்றி இருப்பு வைத்தனர்.
இதைத்தொடர்ந்து 11 நாள் போராட்டத்துக்கு பின் இன்று அதிகாலை முதல் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கடலில் 3, 4 நாட்கள் இவர்கள் தங்கி இருந்து மீன்பிடித்து பின்னர் கரை திரும்புவார்கள்.