< Back
புதுச்சேரி
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
புதுச்சேரி

வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தினத்தந்தி
|
24 July 2023 10:49 PM IST

ஐகோர்ட்டின் சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்தனர்

புதுச்சேரி

சட்ட மாமேதை அம்பேத்கரின் புகைப்படங்களையோ அல்லது உருவ சிலையையோ இனி எந்த நீதிமன்றத்திலும் வைக்கக் கூடாது என்ற சென்னை ஐகோர்ட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அம்பேத்கர் படம், சிலையை அனைத்து கோர்ட்டுகளிலும் வைக்க வலியுறுத்தியும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தினர் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோர்ட்டு நுழைவாயிலில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் குமரன் தலைமை தாங்கினார். செயலாளர் கதிர்வேல் மற்றும் நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், தட்சிணாமூர்த்தி, திருமலைவாசன், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர். இதன் காரணமாக இன்று கோர்ட்டில் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்