< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை
|18 Aug 2023 9:11 PM IST
மத்திய அரசு திட்டத்தின் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடந்தது.
காரைக்கால்
மத்திய அரசின் "ஸ்வதேஸ் தர்ஷன்" திட்டத்தின் மூலம் காரைக்காலில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், நாக.தியாகராஜன், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரைக்காலில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வாறு சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது என கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், வணிகர்கள் கலந்துகொண்டனர்.