இளநிலை கணக்கு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு
|புதுவை அரசுத்துறைகளில் பணியாற்றும் இளநிலை கணக்கு அதிகாரிகள் 6 பேர் முதுநிலை கணக்கு அதிகாரிகள் பணியை கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி
புதுவை அரசுத்துறைகளில் பணியாற்றும் இளநிலை கணக்கு அதிகாரிகள் 6 பேர் முதுநிலை கணக்கு அதிகாரிகள் பணியை கூடுதலாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி சமூக நலத்துறையில் பணியாற்றும் பிரேமா மீன்வளத்துறையிலும், நில அளவை மற்றும் பத்திர பதிவேடுகள் துறையில் பணியாற்றும் ராஜேஸ்வரி அரசு மருந்தகத்திலும், பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டத்தில் பணியாற்றும் சஜன் ஷேக் கட்டிடங்கள் மற்றும் சாலைகள் அலுவலகத்திலும் முதுநிலை கணக்கு அதிகாரி பொறுப்பினை கூடுதலாக கவனிப்பார்கள்.
அதேபோல் நகரமைப்பு குழுமத்தில் பணியாற்றும் ராணி, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையிலும், உயர்கல்விததுறையில் பணியாற்றும் சாந்தி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திலும், செய்தி மற்றும் விளம்பரத்துறையில் பணியாற்றும் சிவானந்தன் பொதுப்பணித்துறை மத்திய அலுவலகத்திலும், காரைக்கால் சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் கலையரசி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியிலும் முதுநிலை கணக்கு அதிகாரி பொறுப்பினை கூடுதலாக கவனிப்பார்கள்.
இதற்கான உத்தரவினை நிதித்துறை துணை செயலாளர் ரத்னகோஷ் கிஷோர் பிறப்பித்துள்ளார்.