< Back
புதுச்சேரி
நடிகர் யோகி பாபு, முதல்-அமைச்சர்  ரங்கசாமியுடன் சந்திப்பு
புதுச்சேரி

நடிகர் யோகி பாபு, முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் சந்திப்பு

தினத்தந்தி
|
4 Sept 2023 10:49 PM IST

புதுவை சட்டசபையில் நடிகர் யோகிபாபு, முதல்-அமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

புதுச்சேரி

புதுவை சட்டசபையில் நடிகர் யோகிபாபு, முதல்-அமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

நடிகர் யோகிபாபு

புதுவை வந்த நடிகர் யோகிபாபு, சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி, யோகிபாபுவிடம் நலம் விசாரித்தார். அவரிடம் சொந்த ஊர் சென்னை தானா? என கேள்வி எழுப்பினார். அதற்கு யோகிபாபு, 'தனது பூர்வீகம் ஆற்காடு எனவும், பிறந்தது சென்னை தான். தனது தந்தை ராணுவத்தில் வேலை பார்த்தவர். தானும் ஆசைப்பட்டு ராணுவத்துக்கு சென்று ஓராண்டில் திரும்பி விட்டதாகவும்' தெரிவித்தார்.

தற்போது என்ன படம் நடிக்கிறீர்கள்? என்ன படம் வெளியாகியுள்ளது? வித்தியாசமான கதாபாத்திரம் ஏதாவது நடிக்கிறீர்களா? என முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டவே, 'அதற்கு நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்தேன். தற்போது லக்கிமேன் என்ற படம் வெளியாகியுள்ளது. பெண் வேடத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக' யோகிபாபு தெரிவித்தார்.

காலில் விழுந்து...

தொடர்ந்து முதல்- அமைச்சரிடம் நீங்கள் படம் பார்ப்பீர்களா? என யோகிபாபு கேட்டார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, 'முன்பு தியேட்டருக்கு சென்று படம் பார்த்தேன். தற்போது வேலைப்பளு காரணமாக நேரம் இல்லை எனத்தெரிவித்தார். எப்போதாவது வீட்டில் ஓய்வு எடுக்கும் நேரத்தில் டி.வி.யில் ஒளிப்பரப்பாகும் படங்களை பார்ப்பேன்' என்றார்.

பின்னர் நடிகர் யோகிபாபு, முதல்-அமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அவருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி திருநீறு பூசி, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்