விபத்து வழக்கு ஆவணங்களை விரைவாக வழங்கவேண்டும்
|சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவாக வழங்கவேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
புதுச்சேரி
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை விரைவாக வழங்கவேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
ஆவணங்களை விரைவாக...
மோட்டார் வாகன விதிமுறை சட்டங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகள் தொடர்பான விளக்க கூட்டம் காவல்துறை தலைமையகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்குமார், வீரவல்லவன், பாஸ்கர், வம்சீதரரெட்டி உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகள் தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.
விசாரணை அறிக்கை
அப்போது அவர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு விரைவாக கிடைக்க சுப்ரீம் கோர்ட்டு சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. குறிப்பாக 2 மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவருக்கு உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரமும், இறந்தால் ரூ.2 லட்சமும் அரசு இழப்பீடு வழங்கும். அதனை பெறுவதற்கான ஆவணங்களையும் போலீசார் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக பல்வேறு சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகளையும் தெரிவித்தார்.
மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.