< Back
புதுச்சேரி
அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு
புதுச்சேரி

அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

தினத்தந்தி
|
18 Aug 2023 9:29 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, காரைக்காலில் உள்ள அரசு அலுவலகங்களில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், இன்று மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில், 'சாதி, பிராந்திய, மத, மொழிகள் முதலான வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்கள் அனைவரும் ஒருவரே என்று உறுதிமொழி' எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி துணை கலெக்டர் சம்யக் ஜெயின், துணை கலெக்டர் வெங்கடகிருஷ்ணன், உள்ளாட்சி துறை துணை இயக்குனர் சுபாஷ், மாவட்ட கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். காரைக்கால் நலவழித்துறை அலுவலகத்தில் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ் குமார் தலைமையிலும், முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகன் தலைமையில் மதநல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் செய்திகள்