பிரான்ஸ் மருத்துவ மாணவி கடத்தல்?
|புதுவையில் பிரான்சு மருத்துவ மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி
புதுவையில் பிரான்சு மருத்துவ மாணவி கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவ மாணவி
புதுவை ரெட்டியார்பாளையம் தேவா நகரை சேர்ந்தவர் அமிர்தமுருகன் புஷ்கரன். இவரது மனைவி லலிதா (வயது 50). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களான இவர்களுக்கு விக்னேஷ்வரி(29), காவியா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர். காவியா பிரான்சில் 3-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
இதில் மூத்த மகள் வின்னேஷ்வரிக்கு கடந்த மாதம் புதுவையில் திருமணம் முடிந்தது. அவர் அடுத்த மாதம் பிரான்ஸ் செல்ல முடிவு செய்து புதுவையிலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில் இளைய மகள் காவியா நேற்று மதியம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
கடத்தப்பட்டாரா?
ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாயார் லலிதா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் காவியாவை அரும்பார்த்தபுரம் தக்ககுட்டையை சேர்ந்த ரத்தினவேல் மகனான பெருமாள் என்ற அஜித் கடத்தி சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.