< Back
புதுச்சேரி
தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்
புதுச்சேரி

தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
13 July 2023 9:15 PM IST

புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது..

புதுச்சேரி

புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் துரைராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள (புதுச்சேரி, விழுப்புரம்) அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் திருத்தம் செய்ய வருகிற 31-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் ஆதாரில் முகவரி மாற்றம், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் திருத்தம் செய்து கொள்ளலாம். ஆதார் திருத்தம் செய்ய வருபவர்கள் ஆதார் நகல், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போனை உடன் எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்