< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் எண் அவசியம்
|2 Sept 2023 9:56 PM IST
பிறப்பு, இறப்பு பதிவின்போது ஆதார் எண் அவசியம் என காரைக்கால் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்
காரைக்கால் நகராட்சி ஆணையர் சத்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் நகராட்சி பகுதியில் நடைபெறும் பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய வருகை தரும்போது புதுச்சேரி மாநில தலைமை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் உத்தரவின்படி பிறப்பிற்கு பெற்றோரின் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும். இறப்புக்கு இறந்த நபரின் ஆதார் எண் இணைக்கவேண்டும்.
எனவே காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், நகராட்சியில் பிறப்பு, இறப்பு பதிவு செய்ய வரும்போது ஆதார் எண்ணை இணைத்து பிறப்பு, இறப்பு சான்றிதழ் தடையின்றி வழங்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.