< Back
புதுச்சேரி
சேலையில் தீப்பிடித்து பெண் உடல் கருகி சாவு
புதுச்சேரி

சேலையில் தீப்பிடித்து பெண் உடல் கருகி சாவு

தினத்தந்தி
|
22 Jun 2023 9:48 PM IST

அரியாங்குப்பம் அருகே வீட்டில் பூஜை செய்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் உடல் கருகி உயிரிழந்தார்.

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 64). ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி பத்மசுந்தரி (54). இவர் சம்பவத்தன்று வீட்டில் பூஜை செய்தார். அப்போது கற்பூரம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக பத்மசுந்தரியின் புடவையில் தீப்பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் தீ உடல் முழுவதும் பரவியது. தீக்காயத்தில் அலறிய அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பத்மசுந்தரியை மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பத்மசுந்தரி நேற்று இரவு பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்