< Back
புதுச்சேரி
மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி
புதுச்சேரி

மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி

தினத்தந்தி
|
11 Aug 2023 9:34 PM IST

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.

மாதூர்

காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாடித்தோட்டம் அமைப்பது குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமை வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி பிரிவு தலைவர் வெங்கடேஸ்வரன், 'வீட்டுத்தோட்டம் அமைப்பதில் ஆர்வமுள்ள, நிலம் இல்லாதவர்களுக்கும் மாடித்தோட்ட தொழில் நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரைக்கால் மாவட்டம் தனது காய்கறி தேவைகளுக்கு அண்டை மாவட்டங்களையே சார்ந்துள்ளது. மாடித்தோட்ட சாகுபடியை பின்பற்றும் போது இந்த நிலை மாறும். மேலும் நஞ்சற்ற பசுமையான காய்கறிகளை நாம் நமது மாடித்தோட்டத்தில் உற்பத்தி செய்து கொள்ள முடியும்' என்றார்.

வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் கதிரவன் தோட்டக்கலை 'கோக்கோபோனிக்ஸ்' நுட்பத்தில் மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து பயிற்சி மற்றும் செயல் விளக்கம் அளித்தார். முகாம் இறுதியில் தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்கு மாடித்தோட்டத்திற்கான இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்