< Back
புதுச்சேரி
லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது
புதுச்சேரி

லாட்டரி சீட்டு விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
13 Oct 2023 9:44 PM IST

காரைக்காலில் லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக, நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், பேப்பரில் எழுதி 3 நம்பர் லாட்டரி விற்றது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவரிடமிருந்து, 2 செல்போன்கள், மோட்டார் சைக்கிள், ரூ.3,240 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்