
போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு

அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குள் நல்ல பாம்பு புகுந்தது.
அரியாங்குப்பம்
'பாம்பை கண்டால் படையே நடுங்கும்' என்பார்கள். அதற்கு போலீசார் மட்டும் விதிவிலக்கா.. என்ன?. ஆம்..அப்படித்தான் புதுச்சேரி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் நல்ல பாம்பு ஒன்று புகுந்ததால் போலீசார் அலறியடிபடி வெளியேறி சம்பவம் நடந்தது.
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை தண்ணீர் கேன் உள்ள பகுதியில் நல்ல பாம்பு ஒன்று சுருண்டபடி இருந்தது. தண்ணீர் குடிக்க சென்ற போலீஸ்காரர் ஒருவர்,, பாம்பு இருப்பதை கண்டு கூச்சலிட்டார். போலீசாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக போலீசார் தண்ணீர் டேங்க் (பில்டர் வாட்டர்) பகுதியில் நல்ல பாம்பு இருந்ததை பார்த்து புதுச்சேரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை ஊழியர் கண்ணதாசன் பாம்பினை லாவகமாக பிடித்தார். அதன் பின்னரே போலீசார் அச்சத்தில் இருந்து விலகி நிம்மதியடைந்தனர்.
நேற்று வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பு பகுதியில் பெண் மயில் ஒன்று இறந்த நிலையில் கிடைத்தது. இது குறித்து அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், இறந்த மயிலை வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்தார்.