< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புதுப்பொலிவு பெறும் யகைவினை கிராமம்
|5 Aug 2023 11:08 PM IST
புதுவைக்கு ஜனாதிபதி வருவதையொட்டி கைவினை கிராமம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
புதுச்சேரி
ஜனாதிபதி திரவுபதி முர்மு திங்கட்கிழமை புதுச்சேரி வருகிறார். மாலை 4 மணிக்கு அவர் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தை பார்வையிடுகிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி கைவினை கிராமத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அவர் செல்லும் வழியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இரவினை பகலாக்கும் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் கைவினை கிராமத்தில் கற்களால் விலங்குகள், பறவைகள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை வரவேற்கு கைவினை கிராமத்தை தயார் படுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.