< Back
புதுச்சேரி
நள்ளிரவில் அறுந்து விழுந்த மின்கம்பி
புதுச்சேரி

நள்ளிரவில் அறுந்து விழுந்த மின்கம்பி

தினத்தந்தி
|
28 Jun 2023 9:48 PM IST

திருபுவனை அருகே நள்ளிரவில் மின்கம்பி அறுந்து விழுந்தது.

திருபுவனை

திருபுவனை அருகே மதகடிப்பட்டு பாளையத்தில் கஸ்தூரிபாய் நகர் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி நேற்று இரவு திடீரென்று அறுந்து கீழே விழுந்தது. இதனை இன்று காலை பார்த்த அப்பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்தனர். முன்னெச்சரிக்கையாக தெருவின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து யாரும் வராதபடி செய்தனர்.

இதுபற்றி திருபுவனை மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை சீரமைத்து, மின்சாரம் வழங்கப்பட்டது.

மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் யாரும் அந்த வழியாக செல்லாததால் நல்லவேளையாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்