< Back
புதுச்சேரி
ரகசிய திருமணம் செய்த செவிலியர் தற்கொலை
புதுச்சேரி

ரகசிய திருமணம் செய்த செவிலியர் தற்கொலை

தினத்தந்தி
|
6 Aug 2023 10:00 PM IST

திருநள்ளாறு அருகே ரகசிய திருமணம் செய்த செவிலியர் தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.

திருநள்ளாறு

திருநள்ளாறு அருகே ரகசிய திருமணம் செய்த செவிலியர் தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.

செவிலியர்

மயிலாடுதுறை மாவட்டம் அன்னவாசலை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ராணி (வயது 50). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வாழ்கிறார். இவர்களின் மகள் நிஷா, சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் திருநள்ளாரை அடுத்த பத்தக்குடியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் தினேஷை நிஷா, தனது குடும்பத்துக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்துகொண்டு, அவருடன் வாழ்ந்து வந்தார். அப்போதும் சென்னையில் இருப்பதாகவே நிஷா தனது தாய் ராணியிடம் கூறி சமாளித்து வந்தார்.

தற்கொலை

கடந்த 28-ந் தேதி கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நிஷா எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், நிஷா பரிதாபமாக இறந்துபோனார். இதுபற்றி ராணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மகள் சென்னையில் வேலையில் இருப்பதாக நம்பிய நிலையில், நிஷா உயிரிழந்ததை அறிந்து ராணி அதிர்ச்சி அடைந்தார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருநள்ளாறு போலீசில் ராணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்