5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
|காரைக்கால் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியின்போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.
காரைக்கால்
காரைக்கால் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியின்போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.
ஒடிசா தொழிலாளி
காரைக்கால் மேற்கு புறவழிச்சாலை அருகே ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அலியா நாயக் (வயது 25) என்ற தொழிலாளி நேற்று 5-வது மாடியில் கட்டுமான பணியில் ஈடுபட்டார். மாலை பணிகள் முடிந்த நிலையில், கட்டுமான பொருட்களை எடுத்துவைத்துக் கொண்டு இருந்தார்.
தவறி விழுந்து பலி
அப்போது எதிர்பாரா விதமாக தடுப்புச்சுவரை கவனிக்காமல் 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். தரையில் மோதிய வேகத்தில் அவரது தலை, மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த சக தொழிலளார்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அலியா நாயக் பரிதாபமாக இறந்துபோனார். இது தொடர்பாக காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.