< Back
புதுச்சேரி
புதுச்சேரி
அளவீடு தரத்திற்கான புதிய சோதனை கூடம்
|25 Jun 2023 10:22 PM IST
புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் அளவீடு தரத்திற்கான புதிய சோதனை கூடம் திறக்கப்பட்டது.
புதுச்சேரி
மத்திய அரசு சார்பில் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள தொழிற்பேட்டையில் சிறு குறு தொழிற்சாலை உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் அளவீடு கருவிகளின் தரத்தை சோதிக்கும் பரிசோதனை கூடம் திறக்கப்பட்டது. தொடர்ந்து தொழில்துறையின் நலனுக்காக சோதனை கூடத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வசதிகள் (தானியங்கி) அளவியல் மற்றும் அழுத்தம் பிரிவு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம்.இ. சோதனை நிலைய புதுச்சேரி உதவி இயக்குனர் உதயகுமார் வரவேற்று பேசினார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கோவிந்தராஜ் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். சென்னை சிறு குறு தொழில் மேம்பாட்டு பிரிவு இணை இயக்குனர்கள் சுரேஷ் பாபுஜி, தர்மசெல்வன் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர்.