< Back
புதுச்சேரி
குப்பைகளை தரம் பிரிக்க புதிய எந்திரம்
புதுச்சேரி

குப்பைகளை தரம் பிரிக்க புதிய எந்திரம்

தினத்தந்தி
|
6 Sept 2023 9:13 PM IST

பறவை பேட்டை குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்க புதிய எந்திரத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

காரைக்கால்

காரைக்கால் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பறவை பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, அகற்றப்படுகிறது. இதற்காக குப்பைகளை தரம்பிரிக்கும் புதிய எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் குலோத்துங்கன் ஆய்வு செய்தார். அப்போது அவரது முன்னிலையில் எந்திரம் இயக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து சோதனை செய்யப்பட்டது. இந்த புதிய எந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 200 டன் அளவிற்கு குப்பைகளை தரம் பிரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, அங்கு இருந்த தொழிலாளர்களிடம், முககவசம், கை உறை அணிந்து பாதுகாப்பாக பணியாற்றுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்