< Back
புதுச்சேரி
அர்ச்சகராக மாறி மந்திரம் ஓதிய அமைச்சர்
புதுச்சேரி

அர்ச்சகராக மாறி மந்திரம் ஓதிய அமைச்சர்

தினத்தந்தி
|
14 July 2023 9:50 PM IST

திருக்கனூர் அருகே100 நாள் வேலை தொடக்க விழாவில் அர்ச்சகர் இல்லாததால் அமைச்சர் அர்ச்சகராக மாறி மந்திரம் ஓதினார்.

திருக்கனூர்

மண்ணாடிப்பட்டு தொகுதி கொ.மணவெளி கிராமத்தில் உள்ள விக்கிரவாண்டி வாய்க்காலை செட்டிப்பட்டு முதல் மணவெளி வரை தூர்வாரும் பணி ரூ.25 லட்சம் மதிப்பிலும், மண்ணாடிப்பட்டு ஏரி தூர்வாரும் பணி ரூ.39.50 லட்சம் மதிப்பிலும் நடக்கிறது. இந்த பணிகளை அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன்குமார் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

பூமிபூஜை செய்ய அர்ச்சகர் இல்லாததால் அமைச்சர் சாய்.சரவணன்குமார் திடீரென மந்திரம் ஓதினார். இதனை பொதுமக்கள், பெண் தொழிலாளர்கள் வியந்து பார்த்தனர். அப்போது பேசிய அமைச்சர் சாய் சரவணன்குமார், புதுச்சேரி மாநிலத்திலேயே மண்ணாடிப்பட்டு தொகுதியில் தான் அதிக நாட்கள் 100 நாள் வேலை திட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

100 நாள் வேலை தொடக்க விழாவில் அர்ச்சகராக மாறி அமைச்சரே மந்திரம் ஓதிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

மேலும் செய்திகள்