< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஒற்றுமை, சமத்துவத்திற்கான மினி மராத்தான்
|27 Feb 2023 10:48 PM IST
திருக்கனூர் பிரைனி ப்ளூம்ஸ் லெகோல் இண்டர்நேசனல் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி சார்பில் ஒற்றுமை, சமத்துவத்திற்கான மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
திருக்கனூர்
திருக்கனூர் பிரைனி ப்ளூம்ஸ் லெகோல் இண்டர்நேசனல் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி சார்பில் ஒற்றுமை, சமத்துவத்திற்கான மினி மராத்தான் போட்டி நடத்தப்பட்டது. அரவிந்த் கல்வி குழும தாளாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணை தாளாளர் திவ்யா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக உணவுபொருள் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸ் சூப்பிரண்டு ரக்சனாசிங் கலந்து கொண்டு மராத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் 5 முதல் 16 வயதுடைய தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் பள்ளி முதல்வர் சுபாஷினி நன்றி கூறினார்.