< Back
புதுச்சேரி
சாராயக்கடையில் கொத்தனாருக்கு சரமாரி வெட்டு
புதுச்சேரி

சாராயக்கடையில் கொத்தனாருக்கு சரமாரி வெட்டு

தினத்தந்தி
|
30 Sept 2023 11:10 PM IST

சாராயக்கடையில் வைத்து கொத்தனாரை சரமாரியாக வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மூலக்குளம்

சாராயக்கடையில் வைத்து கொத்தனாரை சரமாரியாக வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கொத்தனாருக்கு வெட்டு

புதுவை பூமியான்பேட்டை லம்பார்ட் சரவணன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 35). கொத்தனார்.

இந்தநிலையில் இன்று அவர் மேட்டுப்பாளையம் சாராயக்கடைக்கு சென்றார். கடையில் சாராயம் குடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் அவரை சரமாரியாக தாக்கியதுடன் தலை மற்றும் கைகளில் கத்தியாலும் வெட்டினர். இந்த சரமாரி தாக்குதலில் படுகாயம் அடைந்த ராஜேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதைத்தொடர்ந்து அவரை வெட்டியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

தீவிர சிகிச்சை

ராஜேஷ்குமாரை வெட்டியபோது அங்கு சாராயம் குடித்துக்கொண்டு இருந்தவர்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். சிலர் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ராஜேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ராஜேஷ்குமாருக்கும் பூமியான்பேட்டை பாவாணர் நகரை சேர்ந்த தாஸ், பெருமாள், பிரகாஷ் ஆகிய 3 பேருக்கும் இடையே காலையில் டீக்கடையில் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது.

3 பேருக்கு வலைவீச்சு

அதன் எதிரொலியாக அவர்கள் கொலை வெறிதாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்