மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டம்
|75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வருகிற 7-ந்தேதி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி
75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வருகிற 7-ந்தேதி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
புதுவை எம்.பி. செல்வகணபதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாரத்தான் ஓட்டம்
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழாவினை கொண்டாடும் வகையில் இளைஞர்களுக்கான மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.
இதில் புதுவை மாநிலத்தில் உள்ள 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கலாம். போட்டிகள் அன்றைய தினம் காலை 5 மணிக்கு கடற்கரை காந்தி சிலை அருகே தொடங்குகிறது.
14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 1-1-2009 முதல் 31-12-2021 வரை பிறந்தவர்களும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 1-1-2006 முதல் 31-12-2008 வரை பிறந்தவர்களும் பங்கேற்கலாம். 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு (ஆண், பெண்) 5 கி.மீ. தூரமும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு (ஆண், பெண்) 8 கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரொக்கப்பரிசு
14 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.9 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.8 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.6 ஆயிரம், ஆறுதல் பரிசாக 25 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
17 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.8 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், ஆறுதல் பரிசாக 25 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
பங்கு பெறும் அனைவருக்கும் டி-சர்ட் வழங்கப்படுவதுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு தனித்தனியாக பரிசுத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.