< Back
புதுச்சேரி
பஸ்சில் மதுபானம் கடத்த முயன்றவர் கைது
புதுச்சேரி

பஸ்சில் மதுபானம் கடத்த முயன்றவர் கைது

தினத்தந்தி
|
21 July 2023 9:37 PM IST

காரைக்காலில் இருந்து நாகைக்கு பஸ்சில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்கால்

காரைக்காலில் இருந்து நாகைக்கு பஸ்சில் மதுபானம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுபானம் கடத்தல்

காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராஜா மற்றும் போலீசார் பஸ் நிலையத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகை செல்லும் பஸ்சில் பெரிய அளவிலான பையுடன் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஏறினார்.

இதைக்கண்ட போலீசார் அந்த நபரை பிடித்து பையை சோதனை செய்தனர். அப்போது பையில் 170 மதுபாட்டில்கள் அடுக்கி வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

விசாரணையில் அவர், நாகையை சேர்ந்த சண்முகம் (வயது 38) என்பதும், கூடுதல் விலைக்கு விற்பதற்காக காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்