< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கருங்கல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
|11 July 2023 9:54 PM IST
கிருமாம்பாக்கத்தில் கருங்கல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக டிரைவர், கிளீனர் தப்பினர்.
பாகூர்
பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை வரை மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இந்த நிலையில் இன்று காலை 5 மணியளவில் கிளியனூரில் இருந்து சிதம்பரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை பணிக்காக கருங்கல் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி சென்றது. புதுச்சேரி - கடலூர் சாலையில் கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் லாரியை சாலையோரம் ஒதுக்கினார்.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த லாரி, மழையால் சாலையில் வழுக்கிக்கொண்டு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர், கிளீனர் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.