திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
|ஆடி பூரத்தை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு
ஆடி பூரத்தை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரம்
திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், ஆடிப்பூரத்தை முன்னிட்டும், இன்று சனிக்கிழமை என்பதாலும் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
புனிதநீராடி தரிசனம்
இன்று அதிகாலை 4.30 மணி முதல் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன்குளத்தில் புனித நீராடினர்.
அதன்பின் சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் அதிக அளவிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.