< Back
புதுச்சேரி
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
புதுச்சேரி

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

தினத்தந்தி
|
25 Oct 2023 10:25 PM IST

காலாப்பட்டு எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

காலாப்பட்டு

காலாப்பட்டு எம்.ஓ.எச். பரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய நலப்பணித்திட்டம் தொடக்க விழா, உலக ஓசோன் தினம் மற்றும் உலக தபால் தினம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் சாந்தாதேவி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ஸ்டெல்லா வசந்தி முன்னிலை வகித்தார். இதில் சமுதாய நலப்பணித்திட்ட புதுச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், விரிவுரையாளர் கலியமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். ஓசோன் படலம் பாதுகாப்பதன் அவசியம், இந்திய தபால் துறைப் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். ஆசிரியை மாலதி தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்