< Back
புதுச்சேரி
புதுச்சேரி
டெய்லரிங் வகுப்புக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்
|16 Sept 2023 11:44 PM IST
திருநள்ளாறு அருகே டெய்லரிங் வகுப்புக்கு சென்ற பட்டதாரி பெண் மாயமனார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநள்ளாறு
திருநள்ளாறை அடுத்த சேத்தூர் தென்பிடாகையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் கவுசல்யா (வயது 22), பி.காம் பட்டதாரியான இவர் தினமும் வீட்டிலிருந்து சைக்கிளில் கிளம்பி, சேத்தூரிலிருந்து காரைக்காலுக்கு பஸ்சில் டெய்லரிங் வகுப்புக்கு போய் வந்தார்.
கடந்த 14-ந்தேதி வழக்கம்போல் டெய்லரிங் வகுப்புக்கு சென்ற கவுசல்யா வகுப்பு முடிந்து வீடு திரும்பவில்லை. அவரது தோழிகள், உறவினர்களைத்தொடர்பு கொண்டும் எந்த தகவலும் இல்லாததால், கவுசல்யாவின் அண்ணன் குமரன், திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.