< Back
புதுச்சேரி
550 கிலோ காகிதத்தால் உருவாகும் பிரம்மாண்ட விநாயகர் சிலை
புதுச்சேரி

550 கிலோ காகிதத்தால் உருவாகும் பிரம்மாண்ட விநாயகர் சிலை

தினத்தந்தி
|
3 Sept 2023 10:45 PM IST

சதுர்த்தி விழாவிற்காக 550 கிலோ காகிதத்தால் பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

புதுச்சேரி

சதுர்த்தி விழாவிற்காக 550 கிலோ காகிதத்தால் பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

புதுவையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளை தயாரித்து பிரதிஷ்டை செய்ய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

பிரம்மாண்ட சிலை

இந்த நிலையில் திலாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தி விநாயகர் சிலை தயார் செய்து தருமாறு கதிர்காமம் இந்திராகாந்தி மேல்நிலைப்பள்ளியில் நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணனிடம் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி அவர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் விநாயகர் சிலையை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதற்காக 550 கிலோ காகிதங்களை கொண்டு 15 அடி உயரத்தில் விநாயகர் சிலையை பிரமாண்டமாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

பிரதிஷ்டை

இந்த சிலையை வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திலாசுப்பேட்டை சந்திப்பில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பின்னர் அந்த சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.

இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்