< Back
புதுச்சேரி
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் சாவு
புதுச்சேரி

கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் சாவு

தினத்தந்தி
|
26 Aug 2023 9:56 PM IST

கோட்டுச்சேரியில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீரென உயிரிழந்தார்.

கோட்டுச்சேரி

நாகப்பட்டினம் ஆரிய நாட்டுத்தெரு சுனாமி நகரைச் சேர்ந்தவர் முருகவேல் (46). மீனவரான இவர், காரைக்கால் கருக்களாஞ்சேரி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரது விசைப்படகில் மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.

நடுக்கடலில் வலையை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தபோது முருகவேலுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே படகை கரைக்கு திருப்பினர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்