< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தொழிற்சாலையில் தீ விபத்து
|19 Aug 2023 10:01 PM IST
சேதராப்பட்டு தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்ப்பட்டது.
சேதராப்பட்டு
சேதராப்பட்டு-மயிலம் சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. அங்கு டிப்பர் ஷாப் மற்றும் அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய 2 யூனிட்டுக்களும் கடந்த சில வருடங்களாக மூடி கிடக்கிறது. டிப்பர் ஷாப் எனப்படும் கட்டுமான தொழில்களுக்கு தயாரிக்கப்படும் மரப் பொருட்கள் உள்ள தொழிற்சாலை யூனிட்டில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. மரப்பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த சேதராப்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரப்பொருட்களும், எந்திரங்களும் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து சேதராப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.