< Back
புதுச்சேரி
போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு
புதுச்சேரி

போலி மதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
1 Oct 2023 11:16 PM IST

சேதராப்பட்டு தீயணைப்பு நிலையம் அருகே செயல்பட்ட போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி

சேதராப்பட்டு தீயணைப்பு நிலையம் அருகே செயல்பட்ட போலி மதுபான தொழிற்சாலையில் இருந்து எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கலால்துறை

புதுவையில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் மற்றும் எரி சாராயம் கடத்தப்படுவதை தடுக்க தாசில்தார் சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூர் மணவெளி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நீண்ட நாட்களாக நின்றுகொண்டு இருந்த மினி சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 10 கேன்களில் 380 லிட்டர் எரிசாராயம், மதுபாட்டிகள் மற்றும் மது தயாரிக்க பயன்படும் எந்திரம் இருந்தது. அவற்றை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக செந்தில்குமார், சீனு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலி மதுபானம் தயாரித்து தமிழகத்தில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இந்த வழக்கில் மரக்காணம் அனுமந்தை அருகே உள்ள செட்டியான்குப்பத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 55) என்பவரை கலால் போலீசார் தேடி வந்தனர்.

போலி மதுபான தொழிற்சாலை

இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சேதராப்பட்டு தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலால்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அங்கிருந்த ஒருவர், கலால் துறையினரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு இருந்து எரிசாராயம், போலி டாஸ்மாக் ஸ்டிக்கர், காலி பாட்டில்கள் மற்றும் எந்திரங்களை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்