காதல் திருமணம் செய்த டிரைவர் தற்கொலை
|கோட்டுச்சேரி அருகே மனைவி மீதான சந்தேகத்தால் காதல் திருமணம் செய்த டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோட்டுச்சேரி
மனைவி மீதான சந்தேகத்தால் காதல் திருமணம் செய்த டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
கோட்டுச்சேரியை அடுத்த கீழகாசாக்குடி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுதன்ராஜ் (வயது 26). நகராட்சி துப்புரவு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி சிந்து (23). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் சிந்துவின் நடத்தை மீது சுதன்ராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சுதன்ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று வீட்டின் உரிமையாளர் பாத்திமா தனியாக இருந்ததால் உதவிக்கு சிந்துவை அழைத்துள்ளார். அதன்பேரில் அவர் இரவு பாத்திமாவின் வீட்டில் தங்கினார். இன்று காலை சிந்து வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் மேற்கூரையில் இரும்பு குழாயில் சுதன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோட்டுச்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.