< Back
புதுச்சேரி
தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி
புதுச்சேரி

தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி

தினத்தந்தி
|
4 Sept 2023 11:41 PM IST

ரெட்டிச்சாவடி அருகே தாறுமாறாக ஓடிய கன்டெய்னர் லாரி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பாகூர்

கடலூரில் இருந்து புதுவை நோக்கி கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. ரெட்டிச்சாவடி அடுத்த மலட்டாறு பாலம் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. ஆனால் லாரியின் டெய்லர் சாலையை மறைத்து அடைத்து நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்படுத்தினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்