இருதரப்பினர் இடையே மோதல்
|சாலையில் தண்ணீரை திறந்து விட்டது தொடர்பாக, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
காரைக்கால்
சாலையில் தண்ணீரை திறந்து விட்டது தொடர்பாக, இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
சாலையில் பெருக்கெடுத்த தண்ணீர்
காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது38). இவர் நேற்று காலை, தனது வீட்டில் தண்ணீரை பயன்படுத்தி வீட்டு வேலை செய்தார்.
அப்போது தேவையற்ற தண்ணீர் சாலையில் அதிக அளவில் பெருக்கெடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இருதரப்பினர் மோதல்
இதை பார்த்த பக்கத்து வீட்டு உறவினர் (கொழுந்தனார் மனைவி) உமாதேவி, ஏன் தண்ணீரை சாலையில் கொட்டி சேறாக்குகிறாய் என கேட்டதாகவும், அவருக்கு துணையாக உமாதேவியின் கணவர் ராஜேஷ்குமாரும் (38) கேட்டதாகவும் தெரிகிறது. இதில் இருதரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ராஜேஷ்குமார், கீழே கிடந்த கம்பை எடுத்து சீதாலட்சுமியை தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் நெடுங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில், ராஜேஷ்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.