< Back
புதுச்சேரி
புதுச்சேரி
விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகா் மீது வழக்கு
|17 Aug 2023 9:28 PM IST
காரைக்கால் அருகே அனுமதியின்றி பட்டாசு வெடித்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காரைக்கால்
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளையொட்டி காரைக்கால் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது விழிதியூரைச் சேர்ந்த தொகுதி செயலாளர் விடுதலைகணல் போலீசார் அனுமதி பெறாமல், காரைக்கால் டாக்டர் அம்பேத்கர்வீதி, நேருவீதி சந்திப்பில் வெடி வெடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சார்லஸ் கொடுத்த புகாரின்பேரில் காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.