< Back
புதுச்சேரி
8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
புதுச்சேரி

8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
4 July 2023 9:53 PM IST

புதுவையில் தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட வேதனையில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

முத்தியால்பேட்டை

தாய்-தந்தை பிரிந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட வேதனையில் 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

8-ம் வகுப்பு மாணவி

புதுவை சோலைநகர் கல்லறை வீதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மதன் (வயது 17), மனோஜ் (16) ஆகிய 2 மகன்களும், மதினா (14) என்ற மகளும் இருந்தனர். மதினா முத்தியால்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்தநிலையில் மூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது மனைவி புஷ்பாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் கணவருடன் கோபித்துக்கொண்டு புஷ்பா தனது குழந்தைகளை பாடசாலை வீதியில் உள்ள தங்கை மங்களேஸ்வரியின் வீட்டில் விட்டுவிட்டு காலாப்பட்டுக்கு சென்றார். அங்கு வீட்டுவேலைகள் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அவ்வப்போது தனது குழந்தைகளிடம் புஷ்பா செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். நேற்று புஷ்பா மதினாவிடம் செல்போனில் பேசியுள்ளார். அதுமுதல் மதினா சோகமாக காணப்பட்டாள். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மதினா வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார் அவளது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாய், தந்தை பிரிந்து வாழ்ந்ததால் மனவேதனையில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்