8-ம் வகுப்பு மாணவி தற்கொலை
|தந்தையின் குடிப்பழக்கத்தால் மனவேதனை அடைந்த 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
நிரவி
தந்தையின் குடிப்பழக்கத்தால் மனவேதனை அடைந்த 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.
8-ம் வகுப்பு மாணவி
காரைக்கால் மாவட்டம் நிரவி அடுத்த கோவில்பத்து கங்கா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. ஓ.என்.ஜி.சி. மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இவர்களின் மகள் ஸ்ரீதேவி (14). அதேபள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சக்திவேல் சரியாக வேலைக்கு போகாமல் மதுகுடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இது மகள் ஸ்ரீதேவிக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூக்குப்போட்டு சாவு
சிறிது நாள் பள்ளிக்கு போகாமல் தனது பாட்டி வீட்டிற்கு கோபித்து கொண்டு மாணவி ஸ்ரீதேவி சென்று விட்டாள். பின்னர், சமாதானப்படுத்தி அழைத்து வந்து பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வீட்டில் சாப்பாட்டுக்காக வைத்திருந்த ரூ.200-ஐ எடுத்துச் சென்று சக்திவேல் மதுகுடித்தார். போதையில் வீடு திரும்பி மனைவியிடம் மீண்டும் தகராறு செய்தார். இதனால், மனம் வெறுத்த ஸ்ரீதேவி வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.