காரைக்கால் உள்விளையாட்டு அரங்கில் 800 பேர் யோகா பயிற்சி
|சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்கால் உள்விளையாட்டு அரங்கில் 800 பேர் யோகா பயிற்சி செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காரைக்கால் உள்விளையாட்டு அரங்கில் யோகாசனம் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் என 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தனர். நிகழ்ச்சியை ஆயுஷ் மருத்துவமனை டாக்டர் லெனின்ஜீவா தொகுத்து வழங்கினார்.
திருநள்ளாறு செருமாவிளங்கையில் உள்ள பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமையில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியர் ஜெயசிவராஜன், நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சரவணன், ஷெர்லி ஆகியோர் செய்திருந்தனர்.