< Back
புதுச்சேரி
76 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
புதுச்சேரி

76 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
5 Sept 2023 11:10 PM IST

வீராம்பட்டினத்தில் 76 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

அரியாங்குப்பம்

பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி சார்பில் சுதந்திர தினத்தையொட்டி 76 ஆயிரம் பனை விதைகள் நடப்படுகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி வீராம்பட்டினம் கடற்கரையில் நடந்தது.

விழாவுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பனை விதை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். இதில் தனசுந்தராம்பாள் சாரிடபுள் டிரஸ்ட் தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்